நெடுந்தீவில் மதுபான விற்பனை அனுமதிக்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி
Jaffna
Sri Lanka
SL Protest
Drugs
By Sathangani
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் அப் பிரதேச மக்களால் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (22) முன்னெடுக்கப்பட்ட அமைதி வழியிலான குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அப்பிரதேச மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், மதகுருமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் தடுப்பு
இதேவேளை போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம் தொடர்பான கருத்தரங்கும் இன்று நடைபெற்றது.
நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள புனித யுவானியார் ஆலய முன்றலில் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இக் கருத்தமர்வில் போதைப்பொருள் பாவனை, குடும்ப வன்முறைகள் மற்றும் மது விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்