வளமான ஈழத்தை அமைக்க விஜய்யின் ஒத்துழைப்பு! வலியுறுத்தும் தமிழர் தரப்பு

Vijay Sri Lankan Tamils Suresh Premachandran Tamil nadu Sri Lankan Peoples
By Dhilak May 10, 2026 07:21 PM GMT
Report
Courtesy: கபில்

வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ்நாட்டின் புதிய முதல் அமைச்சருக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பாக முழுமையான வாழ்த்துக்களை கூறுகின்றோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அவர் கடினமாக உழைப்பார் என்று நம்புகின்றோம். அவர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஒருவர்.

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

தமிழகத்தில் சூடு பிடிக்கும் அரசியல் : அதிமுகவில் 37 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு...!

கச்சதீவு விவகாரம் 

இந்தியாவில் தமிழகம் பல விடயங்களில் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலமாகவுள்ளது. அது அடுத்த கட்டம் நோக்கி செல்வதை ஈழத்தமிழர்கள் முக்கியமாக கருதுகின்றோம். தமிழகம் முன்னேறினால் அது ஈழத்தமிழர்களுக்கு நிறைய வாய்ப்புக்களை உண்டாக்கும்.

வளமான ஈழத்தை அமைக்க விஜய்யின் ஒத்துழைப்பு! வலியுறுத்தும் தமிழர் தரப்பு | Vijay To Prosperous Eelam Premachandran Request

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை முழுமையாக புரிந்துகொண்டு இரண்டு தரப்பும் கைகொர்த்து செயற்படுமாக இருந்தால் நிச்சயமாக உலகத்தில் தமிழ்மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்ப்படும்.

விஜய் முதன்முறையாக வந்திருந்தாலும் கூட பெருமளவு மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார். எனவே வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் அவர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும்.

கச்சதீவு விடயம் தொடர்பாக பேச வேண்டியது டில்லியும் கொழும்பும். கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. மீனவர் பிரச்சனையும் அதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

மீனவர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் பட்சத்தில் கச்சதீவு விடயம் காணாமல் போய்விடலாம். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அங்கும் இருக்கிறார்கள் இங்கும் இருக்கிறார்கள். எனவே உறுதியான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இந்தவிடயங்களில் புதிய முதல் அமைச்சர் இந்திய மத்திய அரசுடன் பேசி காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு." என மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி! ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி! ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு!

தமிழகத்தின் புதிய அத்தியாயம்! முதலைமைச்சர் விஜய்க்கு சஜித் வெளியிட்ட பதிவு

தமிழகத்தின் புதிய அத்தியாயம்! முதலைமைச்சர் விஜய்க்கு சஜித் வெளியிட்ட பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026