தமிழகத்தின் புதிய அத்தியாயம்! முதலைமைச்சர் விஜய்க்கு சஜித் வெளியிட்ட பதிவு
தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியை அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி நீங்கள் பேசினீர்கள்.
உலகத்தில் உள்ள பிரிவினைகள்
வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதையும்; அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்பட்ட சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.
Congratulations to CM Vijay @actorvijay on beginning a new chapter for Tamil Nadu.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 10, 2026
You spoke of a new era rooted in social justice and secularism. History has shown us that societies built only on anger and old wounds eventually stand alone, while those built on fairness, and…
உலகம் ஏற்கனவே பிரிவினைகளால் நிறைந்துள்ளது. நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள்அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையையே ஆகும். நம்மைப் பிரிக்கும் விடயங்களை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம்.
இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலை ஏற்படுத்துவதற்கான ஆற்றலையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கின்றேன்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |