அமைச்சரவையில் இருந்து விஜயதாசவை நீக்க கோரிக்கை!
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (wijayadasa Rajapaksa) அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும் மற்றும் மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கோரிக்கையானது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறன்து.
இதனடிப்படையில், அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கும் எதிரணி அரசியலுக்குத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலும் செயற்படுவதாலேயே விஜயதாச தொடர்பில் மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசியல் வட்டாரங்கள்
இதற்கு ரணில் சாதகமான பதில் வழங்காததுடன் தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ரொஷான் ரணசிங்க செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்மூலம் அரசியல் இலாபம் பெற ரொஷான் ரணசிங்க முற்பட்டதாகவும் அதேபோல் விஜயதாசவையும் நீக்கினால் அவரும் பிரசாரம் தேடலாம் எனவே நேரம் வரும்போது உரிய முடிவை எடுக்கலாமென அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |