சஜித் அணியிலிருந்து விலகுகின்றார் விஜயமுனி! சுயாதீனமாகச் செயற்பட முடிவு
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
Sajith Premadasa
By Laksi
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தீர்மானித்துள்ளார்.
மேலும் தனக்கு இன்னும் அமைப்பாளர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்றும், கட்சி உறுப்புரிமை மட்டுமே உள்ளது என்றும், தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாகச் செயற்பட முடிவு
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சுப் பதவி வகித்த விஜித் விஜயமுனி சொய்சா, அதன்பின்னர் மைத்திரி தரப்புடன் இணைந்தார்.பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் அவர் போட்டியிட்டார். எனினும், நாடாளுமன்றம் தெரிவாகவில்லை.
இந்நிலையிலேயே அவர் சுயாதீனமாகச் செயற்படும் முடிவை எடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்