ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள்
மாகாண சபைகளுக்கான தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து இந்தக் குழு ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |