உர நெருக்கடியை விளக்க கிராமங்களுக்கு சென்று அடி வாங்க முடியாது - ஆளும்கட்சி எம்.பி தெரிவிப்பு
தற்போது ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில்கிரமாங்களுக்கு சென்று விளக்க முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்ன தேரர் மற்றும் டொக்டர் அநுருத்த பாதெனியவை அனுப்புங்கள்.
அவர்கள் கிராம வாசிகளால் தாக்கப்பட்டு கலைக்கப்பட்ட பின்னர் நாம் அதனை பின்பற்றலாம் என ஆளும் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
உர நெருக்கடி தொடர்பில் கிராமவாசிகளுக்கு விளக்கப்போய் அவர்களின் தாக்குதலுக்கு தாம் இலக்காக முடியாது என அவர் நேற்று நடைபெற்ற அரசாங்க குழு கூட்டத்தில் தெரிவித்தார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்தன.
கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக இந்த கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் வண. ரத்ன தேரர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.பி.க்களிடம் கிராமங்களுக்கு சென்று கரிம உர வேளாண்மை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த சாமர தஸநாயக்க எம்.பி,
முதலில் ரத்னதேரரரையும் டொக்டர் பாதெனியவை இரண்டாவது சுற்றிலும் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டக்கொண்டார்.
"கிராமவாசிகளால் அவர்கள் தாக்கப்பட்டவுடன் நாங்கள் அதைப் பின்பற்றலாம்", கிராமப்புறத்தில் உர நெருக்கடிக்கு எதிராக பாரிய எதிர்ப்பலை வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.