முஸ்லிம்களின் பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த புத்தர்! முறியடிக்கப்பட்டது தேரர் குழுவின் திட்டம் (படங்கள்)

Amparai palamunai Attalaisenai Buddhist temple
By Chanakyan Mar 09, 2022 01:47 PM GMT
Report

அம்பாறை - பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அறிந்த பிரதேச அரசியல்வாதிகள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் முயற்சித்துள்ளனர்.

இதனால் குறித்த பிரதேசத்தில் சிறிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுள்ளாஹ் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உட்பட பிரதேச அர சியல்வாதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலாலருடன் தொடர்பு கொண்டு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு விடயம் கொண்டு வரப்பட்டதுடன் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அத்துமீறல் நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருடன் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை வரவழைத்து நிலமையை விளங்கப்படுத்தியிருந்தார்.

விடயங்களை மிக அவதானத்துடன் கேட்டறிந்துகொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக தீர்வினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026