ஈரானில் தீவிரமடையும் வன்முறை!
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடங்கிய போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட இடங்கள்
இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

கடந்த 28-ம் திகதி தொடங்கிய போராட்டம், 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவியுள்ளது.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.
நேற்று ஏற்பட்ட வன்முறையின்போது மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |