யாழில் மக்களிடம் சிக்கிய வன்முறை கும்பலுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்றையதினம்(04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர்.
மேலதிக விசாரணை
அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் , வன்முறை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |