ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : மாற்றியமைக்கப்பட்ட கற்றல் செயற்பாடு
Cold Fever
Matara
University of Ruhuna
By Jaso
ருஹுனு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சுமார் 30 பேர் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையவழி முறையில் கல்வி நடவடிக்கை
இதனையடுத்து விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமுலில் இருக்கும் என்றும் ருஹுனு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்