நடுவீதியில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..! வைரலாகும் காணொளி
நபர் ஒருவர் தனது மனைவியை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது
இதன்போது பொதுமக்கள் சிலர் தாக்குதலை தடுக்கச் சென்றவேளை அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடவத்தை (Kadawatha) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண்
தாக்குதலுக்கு இலக்கான பெண் கீழே விழுந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்களிடம், தன்னை தாக்கியது கணவரென்றும், அவர் தனது வயிற்றில் கடுமையாக தாக்கியதால் தான் சரிந்து விழுந்ததாகவும், வீதி முழுவதும் தன்னை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஒன்று கூடிய பிறகு, குறித்த நபர், இது தனது மனைவி எனவும், தாம் பொலன்னறுவையில் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை கடுமையாக எச்சரித்ததுடன், அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்து பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தனது மனைவியை தாக்கிய நபரை காவல்துறையினர் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
