விராட் கோலியின் மற்றுமொரு சாதனை - இந்தியன் பீரிமியர் லீக் 2023..!
நடப்பு ஐ.பி.எல் தொடர் விறுப்பாக நடைபெற்று வருவதுடன், ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
இதேவேளை, இடை இடையே சில சாதனைகளும் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியினால் நேற்றையதினம் மற்றுமொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கோலியின் சாதனை
நேற்றைய தினம் ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியிருந்தன.
இந்த போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விராட் கோலி தலைவராக செயல்பட்டதுடன், துடுப்பாட்டத்தில் 47 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அணித் தலைவராக 6,500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை 600 பவுண்டரிகளை கோலி விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
