ரஷ்ய விசாவுக்கான அனுமதி: வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட தகவல்
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் விசா வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலதிக நடவடிக்கை
இதேவேளை, இன்று கொழும்பில் ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Had a constructive meeting with the Russian Ambassador in Colombo HE Levan S. Dzhagaryan today. We addressed the urgent situation of Sri Lankans being deployed in the Russia-Ukraine conflict and agreed on immediate steps to resolve these issues. Russia will now require Sri Lanka… pic.twitter.com/TaPQpv1ayE
— M U M Ali Sabry (@alisabrypc) May 29, 2024
அத்துடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |