இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முசலி விஜயம் : மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்
முஸ்லீம் ஹாண்ட் சிறிலங்கா (Sri lanka) அமைப்பின் ஒழுங்கமைப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் (Pakistan) தூதுவராலயத்தின் அனுசரணையில் மன்னார் முசலி (Musali) பிரதேச செயலக பிரிவை சேர்ந்த வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (24) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் மேஜர் ஜெனரல் பகீம் முல் அசீஸின் (Bakim Mul Aziz) பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள மரிச்சுக்கட்டி பகுதியை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்
குறிப்பாக முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரமும் 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மரிச்சுக்கட்டி பகுதியில் 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு கலப்பு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அவர் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளடங்களாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் முசலி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், முஸ்லிம் ஹாண்ட் சிறிலங்கா பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |