காணி மாஃபியாக்களின் பெயரை வெளியிட்ட வியாழேந்திரன்
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2021 தொடக்கம் அரச காணியை அபகரித்தவர்கள் என்பதன் அடிப்படையில் 70 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் பின் கருத்து வெளியிடுகையில் அவர் இது குறித்த விபரங்களை வெளியிட்டார்.
காணி அபகரிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் நபர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்த 70 பேரிலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, பல இடங்களில் காணிகளை அபகரித்திருப்பதாக அவர் கூறுகிறார்.
இவர்கள் ஒரு அணியாக மோசமாக செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் மீதான நடவடிக்கை மந்த கதியிலே இடம்பெறுகிறது.
ஆனால், சாதாரண வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் 10 பேஜ் காணியை பிடித்து இருக்கின்ற போது அவர்களுக்கு எதிரான நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
பெயர் விபரம் வருமாறு,
அடாவடியில் பிள்ளையான் கும்பல்! அபரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் காணிகள்