கொலை நடந்தபோது வியாழேந்திரன் வீட்டிலா இருந்தார்? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
cctv
shooting
issue
viyalendren
By Vanan
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்தாரா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு இருந்தது.
அந்த வகையில் மரணமடைந்தவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம் கமலதாஸ் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பொழுது இராஜாங்க அமைச்சர் சரியாக 5. 59 மணி அளவில் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டு சிசிடிவி கேமரா இயங்காமல் இருந்தமை ஒருபுறமிருக்க, சட்டத்தரணி இவ்வாறான பதிவொன்றை பதிவிட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி