இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
People
Indonesia
By Vasanth
இந்தோனேசியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீற்றர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5.6 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறி வருகிறது.
எரிமலை வெடிப்புக் காரணமாக அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
மேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரமும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி