அமெரிக்காவை மிரட்டிய தலிபான்கள்! வெளியெறும் படைகள் - அச்சத்தில் மக்கள்

America Army Afghanistan Taliban
By Chanakyan Aug 30, 2021 08:48 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் தலிபான்களிடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி 31ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் என்பதே நிபந்தனை என சர்வதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள அமெரிக்க படைகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. இராணுவ தளபாடங்களுடன் அவர்கள் வெளியேறி வருகிறார்கள் எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் அந்த செய்தியில்,

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மற்ற நாட்டினரையும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களையும் தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

தற்போது 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே காபூல் விமான நிலைய பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மற்ற நாட்டினரையும், ஆப்கானிஸ்தான் பொதுமக்களையும் தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் (கே பிரிவு) காபூல் விமான நிலையத்தில் 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 180 பேர் பலியானார்கள்.

அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க உளவு படைக்கு தகவல் கிடைத்தது. எனவே அங்குள்ள அமெரிக்கர்களும் மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விமான நிலையம் அருகே குவிவதை தவிர்க்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிந்திருந்தது.

இதனால் அந்த பகுதியில் அமெரிக்க படைகள் உஷாராக இருந்தன. இந்த நிலையில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு ஏற்றி வந்த காருடன் விமான நிலையம் நோக்கி வந்தனர்.

இதை முன்கூட்டியே கண்டு பிடித்த அமெரிக்கா அந்த கார் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கார் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இதுபற்றி அமெரிக்க இராணுவ செய்தி தொடர்பாளர் பில் அர்பன் கருத்துத் தெரிவிக்கும் போது, 

“விமான நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி குண்டுகளுடன் கார் வந்தது. எனவே அதை நாங்கள் அழித்தோம்.

இதன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிகுண்டு காரை ஏவியது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் அந்த இடத்தில் இருந்த 3 குழந்தைகள் இறந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பயங்கரவாதிகள் விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

அடுத்தடுத்து ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.

ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் வந்தால் முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு சாதனங்கள் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்தன. அவை மூலம் சில ராக்கெட்டுகளை அழித்தனர்.

ஆனாலும் சில குண்டு விமான நிலைய கட்டிடத்தில் வந்து விழுந்தது. இதில் விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்த தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாதிகள்தான் நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் உள்ள கே பிரிவினர் தலிபான்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.

அவர்கள் அமெரிக்கா வெளியேறி செல்வதற்கு முன்பாக கடும் சேதத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

இன்னும் 48 மணி நேரத்தில் அமெரிக்க படைகள் அங்கிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். அதற்குள் என்ன நடக்குமோ? என்ற அச்சநிலை அங்கு நிலவுகிறது.

எப்படியாவது சேதம் இல்லாமல் சென்று விட வேண்டும் என்று அமெரிக்கா முயற்சிக்கிறது. அதே நேரத்தில் அங்கிருந்து தப்பி செல்வதற்காக விமான நிலையத்தில் கூடியிருக்கும் மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட அமெரிக்கா முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி