இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று (09) முதல் மே 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாதவர்களுக்கு இன்று முதல் மே 10ம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுடைய வாக்காளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலோ அல்லது தேர்தல் அலுவலகங்களிலோ தமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
அதிபர் தேர்தல்
அதனைவிட, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் சென்று பெயரை உள்ளிடலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், ஜூலை 17 ஆம் திகதிக்குப் பிறகு எந்த திகதியிலும் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அழைக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்.
எவ்வாறாயினும்,அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |