அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தேசிய தொழிற்சங்க நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலைக்கும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறும் சம்பள அதிகரிப்பு தேவை என தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(25) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டம்
“நாட்டில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு அவசியம்.
மேலும், சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்.” என்றார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், அகில இலங்கை பொது நிர்வாக உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திசாநாயக்க, தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்னஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.