இந்திய இராணுவத்திற்கு வாங்கப்படவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள்
India
Indian Army
By Sumithiran
இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் வகையில் விரைவில் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இலகுரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிக்க இராணுவம் தயாராக உள்ளது.
அனுமதிக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
AH-64E அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இராணுவத்தில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அனுமதி பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலில் இருந்து கிடைப்பதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்