மிரட்டும் வாக்னர் படைத் தலைவன் - கலக்கத்தில் ரஷ்ய, உக்ரைன் நாடுகள்

Ukraine Russia Wagner Group Yevgeny Prigozhin
By Sumithiran Jul 04, 2023 11:19 PM GMT
Report

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டு பெலாரஸில் தங்க வைக்கப்பட்டுள்ள வாக்னர் வாடகைபடை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி எவராலும் தடுக்க முடியாது என சூளுரைத்துள்ளார்.

ரஷ்யாவில் புடின் தலைமைக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்து, திடீரென்று அதனை கைவிட்டு, தற்போது பெலாரஸ் நாட்டிற்கு வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் வாடகை படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக காணொளி பதிவாக வெளியிட்டு, தமது நிலைப்பாட்டை வெளியிடும் எவ்ஜெனி பிரிகோஜின், முதல்முறையாக ஓடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

வாக்னர் வாடகை படை தலைவனின் சூளுரை

ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எதிராக முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர்,வெளியேற்றப்பட்ட எவ்ஜெனி பிரிகோஜின், இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில், தற்போது முதன்முறையாக அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கள் நீதிக்கான அணிவகுப்பு என்பது துரோகிகளை எதிர்த்துப் போராடுவதையும் சமூகத்தை அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது என அந்த ஓடியோவில் பிரிகோஜின் குறிப்பிட்டுள்ளார். இதில் நாங்கள் பெரும்பாலும் வெற்றி வாகை சூடியுள்ளோம். எதிர்காலத்தில், எங்கள் அடுத்த வெற்றிகளை நீங்கள் முன்னணியில் காண்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஓடியோவில் தாம் எங்கிருக்கிறேன் என்பதை குறிப்பிடாமல் பேசியுள்ளதுடன், தமது படை உரிய நேரத்தில் மீண்டும் களமிறங்கும் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு தடை

மிரட்டும் வாக்னர் படைத் தலைவன் - கலக்கத்தில் ரஷ்ய, உக்ரைன் நாடுகள் | Wagner Chief Vows Soon See Our Next Victories

ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எதிராக ஜூன் 24ம் திகதி ஆயுத கிளர்ச்சியை முன்னெடுக்கும் வரையில், ரஷ்ய முன்னணித் தலைவர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வந்துள்ளார் எவ்ஜெனி பிரிகோஜின். ஆனால் தற்போது அவர் தொடர்பான எந்த தகவலையும் வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புடினுக்கு துரோகம் 

மிரட்டும் வாக்னர் படைத் தலைவன் - கலக்கத்தில் ரஷ்ய, உக்ரைன் நாடுகள் | Wagner Chief Vows Soon See Our Next Victories

உக்ரைனில் வாக்னர் படையின் கொடூர நடவடிக்கைகளை கொண்டாடிய ரஷ்ய ஊடகங்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிபர் விளாடிமிர் புடினுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் எவ்ஜெனி பிரிகோஜின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

வாக்னர் படையின் கூடாரங்கள்

மிரட்டும் வாக்னர் படைத் தலைவன் - கலக்கத்தில் ரஷ்ய, உக்ரைன் நாடுகள் | Wagner Chief Vows Soon See Our Next Victories

இதனிடையே, ரஷ்ய ஆதரவு பெலாரஸ் நாட்டில், வாக்னர் படையின் முகாம்கள் தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Osipovichi மாவட்டத்தில் கைவிடப்பட்ட இராணுவ முகாம் ஒன்றை பயன்படுத்த வாக்னர் படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் தற்போது 298 கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு கூடாரத்தில் 30 பேர் வரையில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பெலாரஸ் முகாமில் சுமார் 8,000 வாக்னர் வீரர்கள் ஒன்று திரண்டுள்ளதாகவும், அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025