புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது

Sri Lanka Police Puttalam Sri Lanka
By Shalini Balachandran Jun 09, 2026 01:20 PM GMT
Report

புத்தளத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (09-06-2026) அதிகாலை வணாத்தவில்லு காவல் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் எட்டுப் பேரை வணாத்தவில்லு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சமர்க்களநாயகன் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்திய ரவிகரன்: கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பதற்காகக் குத்தகை

காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள ஆரம்பகட்ட விவரங்களின்படி சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரித் தோட்டம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காகக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த முந்திரித் தோட்டத்தின் விளைச்சலைப் பாதுகாப்பதற்காகக் குத்தகையாளரால் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது | Wanathavilluwa Police Arrest 8 For Murder

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த முந்திரித் தோட்டத்துக்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வாயுத் துப்பாக்கி (Air Rifle) மூலம் சுட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உடலின் முக்கிய பாகங்களில் கடுமையான காயங்களுக்குள்ளான பிரதீப் சுசந்த, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டுப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கோட்டாபயவுக்கு எதிரான தடை உத்தரவின் பின் சலேவுக்கு வெளிவந்த பிரச்சினைகள்

கோட்டாபயவுக்கு எதிரான தடை உத்தரவின் பின் சலேவுக்கு வெளிவந்த பிரச்சினைகள்

தீவிர சிகிச்சை

எனினும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது | Wanathavilluwa Police Arrest 8 For Murder

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குத் தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வணாத்தவில்லு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நோக்கி வரும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

இலங்கை நோக்கி வரும் இரண்டு எரிபொருள் கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026