வெளிநாட்டில் பதுங்கியிருந்தவர்: கட்டுநாயக்காவில் தரையிறங்கியவேளை கைது
2022 ஆம் ஆண்டு கம்பகாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ கொலைக்கு காரணமானவர், நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 30, 2022 அன்று கம்பகா(Gampaha) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அருகில் ‘பாஸ் போடா’ சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
கம்பகா காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான அவிஷ்க மதுசங்க(Saman Rohitha Perera )என்ற நபர் இன்று(10) காலை கைது செய்யப்பட்டு கம்பகா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, மதுசங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கம்பகா நீதவான் நீதிமன்றம் பயணத்தடை
குறித்த சந்தேகநபருக்கு கம்பகா நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்ததுடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர் நாடு திரும்பியதும் அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |