புடின் போட்டுடைத்த இராணுவ ரகசியம்!
ரஷ்யாவில் ஏற்பட்ட வாக்னர் வாடகை இராணுவத்தின் புரட்சியின் பின் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆற்றிய உரை மிகவும் மாறுபட்ட விதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த உரை நிகழ்த்தப்படுகின்ற போது அவரது உடல் மொழி பதட்டமாக காணப்பட்டது. புடின் தனது உரையின் போது வாக்னர் வாடகை இராணுவத்திற்கான ஊதியத்தை ரஷ்ய அரசாங்கமே வழங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் பலவித மனித உரிமை மீறல்கள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள் போன்ற பலவற்றில் ஈடுபட்டதாக பல நாடுகளினாலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளினாலும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற வாக்னர் வாடகை இராணுவத்திரை ரஷ்யா எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடைய இராணுவம் என்று அடையாளப்படுத்தியதில்லை. அதை ஒரு தனியார் இராணுவம் என்றே ரஷ்யா கூறிவருகிறது.
இப்படித்தான் கடந்த 9 வருடங்களாக ரஷ்யா உலகிற்கு கூறி வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் வாக்னர் வாடகை இராணுவம் என்பது ரஷ்யாவினால் உருவாக்கப்பட்டு ரஷ்யாவின் நிதியுதவியுடன் செயற்பட்டு வருகின்ற ரஷ்யாவின் துணை இராணுவ குழுவே என்பதை தனது உரையில் போட்டுடைத்து இருந்தார் ரஷ்ய அதிபர் புடின்.
இது எதிர்வரும் காலங்களில் ரஷ்ய அதிபர் புடினுக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை யாருமே இலகுவில் மறுத்து விட முடியாது.
மூன்று மாதங்களுக்கு முன்னரே உண்மையின் தரிசனம் கூறியது போன்று ரஷ்யாவின் நடந்தேறிய இராணுவ புரட்சி, அதனால், புடின் எதிர்கொள்ளப்போகும் ஆபத்து தொடர்பில் சுருக்கமாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்,