புத்தாண்டு தினத்தில் தனது ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.
இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவர் புத்தாண்டு தினத்தன்று காலை தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
குடும்பத்துடன் இணையவேண்டும்
"நான் குடும்பத்திற்கு திரும்ப வேண்டும்," என்று வோர்னர் தனது அறிவிப்பின் போது கூறினார்.

37 வயதான தொடக்க ஆட்டக்காரர் ஜனவரி 3 ஆம் திகதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.
ஒருநாள் போட்டியில் படைத்த சாதனை
டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டியில் பெற்ற ஓட்டங்கள் வருமாறு,

போட்டிகள்: 161 ஓட்டங்கள்: 6932 சராசரி: 45.3 உயர்ந்த ஓட்ட எண்ணிக்கை: 179 ஸ்ட்ரைக்-ரேட்: 97.26 நான்கு ஓட்டங்கள்: 733 சிக்ஸர்கள்: 130 சதம்: 22 அரைச் சதம்: 33
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        