மேலும் அதிகரிக்கும் வெப்பம்: 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Laksi
வெப்பமான வானிலை குறித்து 7 மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் நாளை (27) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை
அதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இதன் போது, போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், பொது வெளியில் கடுமையான உழைப்பை குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்