ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது -பாதுகாப்பு செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை
Kamal Gunaratne
Colombo
Sri Lankan Peoples
By Sumithiran
ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்
பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமுக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றோருக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் உள் நோக்கத்துடன் செயற்பட்டு பொது மக்களை வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சிக்கக்கூடும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பாரியளவிலான ஆர்ப்பாட்டம்
இதேவேளை நாளையதினம் அரசதலைவரை பதவி விலக கோரி பாரியளவிலான ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடத்தப்படவுள்ளமையினால் பாதுகாப்பு செயலர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
