பத்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
By Sumithiran
மழையுடனான காலநிலை
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் கடுமையான இடிமுழக்கம் மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி
குறிப்பாக ஊவா, கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், ஆகிய மாகாணங்களில் உள்ள மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

