ஜெனீவா அமர்வு இலங்கைக்கு பெரும் சவால்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வு இலங்கைக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தங்கள் தொடர்புகள் காரணமாக களங்கப்பட்ட பலர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசை பலவீனப் படுத்துவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைப் பெற முயல்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வுக்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. பயங்கரவாத மரபுசார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் நிலத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் - நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர்.
ஜெனீவாவில் இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படுவது நிச்சயம் என்றால் அரசு இதுகுறித்து தாமதிக்காமல் ஆராய வேண்டும். இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நிறுவும் நோக்கங்களும் பரந்து பட்டவை.
பொறுப்புக்கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என நான் அவர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

