கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா (Channa De Silva) தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
வங்கி கணக்கு தகவல்
இதன் காரணமாக மக்கள் தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, நிதி மோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வங்கிக் கணக்குத் தகவல்களை மிக இலகுவாக வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி
இதன் காரணமாகவே நிதி மோசடி சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு தகவல் மற்றும் இரகசிய எண்களை கூட நிதி மோசடிக்குள்ளானவர்கள் பரிமாறி உள்ளதாகவும் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |