சர்வதேச விமான நிலையமாக மாறும் ஹிங்குராங்கொட விமான நிலையம்
ஹிங்குராங்கொட (Hingurakgoda) விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அபிவிருத்தித் திட்டம் இன்று (19) விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala De Silva) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஹிங்குராங்கொட விமான நிலையம் இலங்கையின் 6வது சர்வதேச விமான நிலையமாக அமைய உள்ளதாக இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) தெரிவித்துள்ளது.
சிறிலங்கா விமானப்படை
ஹிங்குராங்கொட விமான நிலையம் தற்போது சிறிலங்கா விமானப்படையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், சர்வதேச விமான போக்குவரத்து நியமங்களுக்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம், ஹிங்குராங்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, ஹிங்குராங்கொட விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் இதற்காக திறைசேரி 4 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர (K.D.S Ruwanchandra) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |