சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் (Sri Lanka) கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் உதித புளுகஹபிட்டிய (Uditha Pulukahabitiya) தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
இந்த விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் கருத்து தெரிவிக்கையில், 'நாம் அனைவரும் சர்க்கரை நோயின்றி வாழ முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
அதிக சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் இருந்தால், கொலஸ்ட்ரால் இருந்தால், கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம் இருந்தால், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |