பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : தவறின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து
Driving Licence
Bimal Rathnayake
Drugs
Srilanka Bus
By Sumithiran
போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகள்
போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை எத்தகைய சந்தர்ப்பத்திலும் சேவையில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அதிகளவான பேருந்து சாரதிகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை அண்மைய காலங்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளது இதையடுத்தே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி