நாட்டு மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்: மாநகர சபை விடுத்த எச்சரிக்கை
நாட்டில் பல்வெறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council) எச்சரித்துள்ளது.
நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் இந்த நிலைமைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதாரத் திணைக்கள பிரதம வைத்திய அதிகாரி, கொதிக்க வைத்த நீரை பருகுமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நோய்கள் பரவும் அபாயம்
இதேவேளை, தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, முடிந்தவரை கொதிக்கவைத்த அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்திகரிப்பு நடவடிக்கை
மேலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும், இந்த காலகட்டத்தில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலின் கீழ் கிணறுகள் போன்ற நீர் ஆதாரங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மாநகரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |