நெறிமுறையை மீறும் ஊடகங்களுக்கு அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை
ஊடகங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை அவற்றை ஒழுங்குபடுத்துவது அல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடக நெறிமுறைகளை மீறும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் என்ன முடிவு எடுக்கும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே, வெகுஜன ஊடக அமைச்சர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களைத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுடன் முறையான கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் பொதுச் சட்டம்
சட்டங்களை விதிப்பதற்குப் பதிலாக அரசாங்கத்துடன் விவாதித்து ஊடகங்கள் தொடர்பான பயணத்தை முன்னோக்கி நகர்த்தப் பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொதுச் சட்டத்திற்கு இணங்காத வகையில் ஊடக நிறுவனங்கள் அல்லது பத்திரிகையாளர்கள் செயல்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நளிந்த கூறியுள்ளார்.
இதற்கிடையில், இன்னும் மூன்று மாதங்களில் புதிய ஊடகக் கொள்கை வெளியிடப்படும் வாய்ப்பு இருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
