யாழில் ஒரு வருடத்திற்கு முன் நடந்த ஆரப்பாட்டம்! பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றம்
Jaffna
Ranil Wickremesinghe
Sri Lanka
By pavan
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ். நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்றில் முன்னிலை
இது குறித்து மு.கோமகன் தெரிவிக்கையில், எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை.
ஆனால் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், வழக்கின் போது எனது பெயர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆகையால் எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனவே நான் சட்டத்தரணியூடாக மன்றில் முன்னிலையாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்