சுமணரத்னதேரரின் தாயின் கல்லறை உடைக்கப்பட்டதா..! பிள்ளையானை கேட்ககோரும் மனோ கணேசன்
தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது சுமணரத்தன தேரர், குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அதிகாரபூர்வமாக, அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது வெளியில் இனவாத கருத்து
இதுபற்றி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தவிசாளர், இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தான் நேரடியாக உரையாடியதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பல்லாண்டுகளுக்கும் மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளைக் கூறியும், வன்முறைகளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் மீது ஐசிசிபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் இன்னமும் பாயவில்லை. இச்சட்டத்திலிருந்து இவருக்கு இனிமேல் விலக்கு வழங்க முடியாது. இது முடிவுக்கு வர வேண்டும்.
ரஷ்ய படையினரின் வெறிச்செயல் : உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 உக்ரைனியர்கள் சுட்டுக்கொலை
இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக அதிபர் ரணில் விக்ரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.
உண்மையைக் கண்டறியுமாறு
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் என்னிடம் உரையாடி உள்ளார். அதேபோல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடன் நான் உரையாடினேன்.
தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, தேரர் பகிரங்கமாகக் கூறியுள்ளமை தொடர்பாக உண்மையைக் கண்டறியுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுவே முறைப்படி செய்யப்பட வேண்டிய காரியம் என நினைக்கிறேன் என்றார்.