ரணில் மீதான சட்ட நடவடிக்கை : ஆதரவளிக்கும் வசந்த முதலிகே
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததில் தவறு இல்லை. அது எடுக்க வேண்டிய விடயம். ஆனால் ஒரு சாதாரண விடயத்திற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
மக்கள் போராட்ட அமைப்பின் பேரணி ஒன்றை கண்டியில் ஆரம்பித்து வைத்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கயைில்,
நடவடிக்கை எடுக்க கடுமையான பல விடயங்கள் உள்ளன
ரணில் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான பல விடயங்கள் உள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்காமை, மத்திய வங்கி நிதி மோசடி வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் என்று எல்லாம் அரசியல் அரங்கில் பேசப்பட்டன. இவை மனைவியுடன் வெளிநாடு சென்றதாகக் கூறப்படும் விடயத்தை விட இவை கடுமையான விடயங்களாகும்.
மக்களுக்கு தம்மை இனம் காட்டிய எதிரணி உறுப்பினர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதையடுத்து ரணில் விக்ரமசிங்கவை சரியாகவும் பிழையாகவும் விமர்சித்த சகல எதிரணி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்ததன் மூலம் அவர்கள் அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள் அவர்கள் அனைவரும் ஒத்த தன்மையுடையவர்கள், நண்பர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு காட்டியுள்ளனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 6 மணி நேரம் முன்
