லிந்துல ஓல்ட்ரீம் தோட்டத்தில் குளவி தாக்குதல்: ஒருவர் பலி
லிந்துல ஓல்ட்ரீம் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (21.09.2026) லிந்துல ஓல்ட்ரீம் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 8 தொழிலாளர்களே இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் தேயிலைத் தோட்டத்தில் மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு திடீரென கலைந்ததையடுத்து, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் லிந்துல ஓல்ட்ரீம் தோட்டத்தின் லென் தோமஸ் பிரிவில் வசித்து வந்த 77 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏனைய 7 தோட்டத் தொழிலாளர்களும் லிந்துல பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |