நீர் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
நீர் கட்டணத்திற்கான சூத்திரம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உத்தேச நீர் கட்டண சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கலந்துரையாடல்
தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு நியாயமான விலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
இந்த நீர் கட்டண சூத்திரம் வர்த்தக நிறுவனங்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |