நீர் கட்டண திருத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அடுத்த நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இந்த ஆண்டின் எதிர்வரும் 06 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இதேவேளை, தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்