கம்பஹா வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
Gampaha
Sri Lankan Peoples
Water Cut
By Dilakshan
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுநாள்(23) நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள்(23) காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
எனவே, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் தேவையான நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்