நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Srilanka
warned
Water Supply and Drainage Board
Shortage drinking wate
By MKkamshan
இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது
நாட்டில் தற்போது நிலவும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என அந்த சபை எச்சரித்துள்ளது.
தற்போதைய காலநிலை காரணமாக பிரதான நீர் ஆதாரங்களின் நீர் மட்டங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போது நாளாந்த நீர் நுகர்வு மிக அதிகமாக உள்ளதாக நீர்வள சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரயமாக்குவதனை தவிர்க்குமாறும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
