மின்சாரக் கட்டணத்திற்கு ஏற்ப நீர்க்கட்டணத்தையும் குறைக்க தீர்மானம்!
மின்சாரக் கட்டணக் குறைக்கப்படவுள்ளதனால் அதற்கு ஏற்ப நீர்க் கட்டணத்தையும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீர் கட்டணச் சூத்திரம்
"மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் நீர் கட்டணச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விலைச் சூத்திரம் வகுக்கப்படும்" என அமைச்சர் கூறினார்.
போது, மின் கட்டணம் அடுத்த மாதம் குறைக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும், நீர் விநியோகச் செலவும் குறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆற்றல் செலவு குறைவடையும்
மின்கட்டணம் குறைந்தால் நீர் விநியோகத்திற்கு தேவையான ஆற்றல் செலவும் குறைவடையும், எனவே அதற்கேற்றாற்போல் நீர் கட்டணத்தையும் குறைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போது நீர்க் கட்டணமும்ம் அதிகரிக்கப்பட்டது.
அதேபோல தற்போது, மின்சாரக் கட்டணம் 50 சதவீதத்தால் குறைக்கப்படும் போது கணிசமான அளவு நீர்க் கட்டணத்தையும் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |