புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா சென்ற 52 பேருக்கு கொரோனா
corona
wattala
divulapitiya
By Shalini
புத்தாண்டு பருவத்தில் பேருந்துகளில் சென்ற திவுலபிட்டி மற்றும் வத்தளை பகுதியில் வசிக்கும் 52 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் நலின் ஆரியரத்ன இதை தெரிவித்தார்.
திவுலபிட்டியில் வசிப்பவர்கள் 45 பேர் நுவரெலியாவுக்கு பேருந்துகளில் சுற்றுலா சென்றிருந்தனர். இவர்களில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வத்தளை பகுதியில் உள்ள ஒரு குழு புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மேலும் நான்கு தொழிலாளர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்