இல்லாது போன டொலரை மீட்டெடுக்க இதுவே வழி - நலிந்த ஜெயதிஸ்ஸ ஆலோசனை
இலங்கை அரசியலின் தன்மையில் மாற்றங்களைக் கொண்டுவராமல் பொருளாதாரத்தில் விருத்தியை கொண்டுவர முடியாது என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ ( Nalinda Jeyathissa) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''ஒரு குடும்பத்தின் பணக் கொள்ளை காரணமாக தேசிய சொத்துக்களை மக்கள் இழக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இது தேசிய ரீதியான குற்றமாகும். தொடர்ந்தும் கடன் பெறும் நிலையினை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
உலகில் கடன் பெற்ற பல நாடுகள் தமது தேசிய சொத்துக்களை இழந்துள்ள நிலையே இலங்கைக்கும் ஏற்படவுள்ளது. ஊழல், இலஞ்சம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு செய்தால், இல்லாது போன டொலர் மீண்டும் அதிகரிக்கும். வெளிநாட்டவர்களின் முதலீடுகள் நாட்டில் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.