தேர்தல் ஒத்திவைப்பு -மகிந்த கட்சியின் நிலைப்பாடு வெளியானது
தேர்தலை ஒத்திவைப்பதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன எதிரானது எனவும், அதற்குத் தேவையான நிதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு என்பது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் எனவும் தேர்தலை நடத்துவதற்கு தமது கட்சி துணைநிற்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்த உடனடி நடவடிக்கை
தேர்தலின் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் நேற்று (பிப்ரவரி 14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.