நாங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள் : எச்சரிக்கும் பசில்!
நாங்கள் சிங்கத்தைப் போன்றவர்கள், எங்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (15) கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வரும் அடுத்த அரசாங்கம்
“சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் அடுத்த அரசாங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கமாக இருக்கும்.
நாங்கள் சிங்கத்தைப் போன்றவர்கள், எங்கள் மீது கல் எறியப்பட்டால் திரும்பிப் பார்த்து அது யார் என்று பார்ப்போம், எங்கள் மீது கற்களை எறியாதீர்கள், இனிவரும் காலங்களில் பார்த்துக்கொள்வோம்.
எல்லா தேர்தலிலும் வெற்றி பெறும்
அடுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பலமாக அமையும், முன்னைய அரசாங்கம் போன்று அல்லாது இன்னும் பலமானதாக உருவாகும்.
எந்தத் தேர்தல் நடந்தாலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன எல்லா தேர்தலிலும் வெற்றி பெறும்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்க தயாராவோம்” என்று அவர் மேலும் கூறினார்.